ஆத்தூர் முத்துமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்து மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. விடுமுறை நாளான இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முத்துமலை முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். பால், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. முத்துமலை முருகன் ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்புடைய செய்தி