ஆத்தூர் கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள்மலர்தூவி பிரார்த்தனனை

சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு உடையார்பாளைத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லறைத்தோட்டத்தில் கல்லறை திருநாள் முன்னிட்டு இறந்த உற்றார், உறவினர், நண்பர்களின் கல்லறையில் கிறிஸ்தவமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மனமுருகி பிரர்த்தனை செய்தனர். மரித்த தங்களது முன்னோர்கள் ஆசிர்வாதம் கிடைப்பதோடு, மீண்டும் இப்புவியில் அவதரிப்பார்கள் என்ற நோக்கில் தங்களது பிரர்த்தனை மேற்கொண்டனர். மேலும் கல்லறைத்திருநாளையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டு மரித்த ஆன்மாக்கள் சாந்தியடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி