சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் நரசிங்புரம் நகராட்சிப் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. வாக்குச்சாவடி அலுவலர்கள் அந்தந்த வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று புதிய விண்ணப்பப் படிவங்களை வழங்கி வருகின்றனர். வாக்காளர்கள் இந்தப் படிவங்களை ஆர்வத்துடன் வாங்கிப் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்தத் திருத்தப் பணிகள் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் நோக்கில் நடைபெறுகின்றன.