உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர்

கரூர்: அரவக்குறிச்சியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி