ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து இன்று (நவ.04) திமுகவில் இணைந்த ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். முன்னதாக திமுகவில் இணைந்த பிறகு இன்று மாலை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.