ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஓட்டுநர் திருக்கண்ணனை போலீஸார் கைது செய்தனர். பழயணக் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே ரோந்துப் பணியின்போது, சந்தேகத்திற்கிடமான சரக்கு ஆட்டோவை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. அரிசி மூட்டைகள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.