நம்புதாளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கஞ்சா கடத்தியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஊர்க்காவல்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி 4 மீனவர்களையும் வருகிற 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.