தேசிய கராத்தே போட்டிக்கு பரமக்குடி மாணவா் தோ்வு

பள்ளி கல்வித்துறை சாா்பில் மாநில அளவிலான எஸ். ஜி. எப். ஐ. கராத்தே போட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதிபுதூா் ராஜராஜன் கல்லூரியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 19 வயதுக்குள்பட்டகள் பிரிவில் பரமக்குடி டாக்டா் சுரேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் எல். மனோபாலாஜி முதலிடம் பெற்று தேசியப் போட்டிக்கு தோ்வு பெற்றாா்.

தமிழக அணி சாா்பில், 33 மாணவிகளும், 36 மாணவா்களும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெறவுள்ள 68-ஆவது தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனா். வெற்றி பெற்ற மாணவா் மனோபாலாஜி, பயிற்சியாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டி கௌரவித்தனா்.

தொடர்புடைய செய்தி