நேற்று இரவு பாம்பன் சாலை பாலத்தின் நடைமேடையில் மின்விளக்குகள் எரியாததால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. பொதுமக்கள் இது குறித்து புகார் அளித்ததை அடுத்து, இன்று காலை முதல் பாலத்தின் நடைமேடையில் உள்ள மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளன. இதனால் இராமேஸ்வரம் சுற்றுலாப் பயணிகள் பாம்பன் பாலத்தின் அழகை அச்சமின்றி ரசிக்க முடியும்.