ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மஞ்சூா் கிராமத்தில் திருநாவுக்கரசு என்பவரின் வீட்டில் பூட்டியிருந்தபோது, பிரோவில் வைத்திருந்த 13 பவுன் நகை மற்றும் 5 ஜோடி வெள்ளிக் கொலுசு மாயமானது. இதுகுறித்து தொண்டி போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.