இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபு இணைந்து உருவாக்கி வரும் புதிய படம் “வாரணாசி” என்ற பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காசியின் வரலாற்றை மையமாகக் கொண்ட இந்த மாபெரும் திரைப்படத்தின் போஸ்டர் நவம்பர் 15 அன்று ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.