ஹரியானா மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் பெரும் மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அங்குள்ள மொத்த வாக்குகளில் எட்டில் ஒரு வாக்கு போலியானது என்றும், சுமார் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒரே பெண் வெவ்வேறு பெயர்களில் 22 வாக்குகளை செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், ஹரியானாவில் தபால் வாக்குகளிலும் பெரும் மோசடி நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.