புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும், குற்ற வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய 11 காவல் அதிகாரிகளை நேரடியாக அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.