புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய சிறுவனை தட்டிக்கேட்ட பாண்டியனிடம், சிறுவனும் அவரது ஆதரவாளர்களான கருப்பையா மற்றும் அவரது தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தின்போது, கோவிந்தராஜ் என்பவர் கருப்பையாவை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சிறுவன் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.