புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வாளரமாணிக்கம் கிராமத்தில் மயான பூமியை வருவாய்த்துறையினர் தனியாருக்கு பட்டா வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, 22 கிராம மக்கள் மயானத்தை மீட்டுத்தர வலியுறுத்தி இன்று (நவ. 3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வருவாய் அலுவலர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.