புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி அடுத்த தல்லாம்பட்டி ஈபி அலுவலகம் அருகே, வடிவேல் (40) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தியபோது கே. புதுப்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1/4 யூனிட் மணலுடன் மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.