புதுக்கோட்டை மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வு முகாம் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறுகிறது. புதுகை மாநகராட்சி, திருவரங்குளம், பொன்னமராவதி, மணமேல்குடி, அன்னவாசல் ஆகிய பகுதிகளில் நடைபெறும் இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.