புதுக்கோட்டை மாவட்டம் கீழாத்தூரில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். மழை வளம், குழந்தை வரம், திருமண வரம் மற்றும் நீண்ட ஆயுள் வேண்டியும் பெண்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.