திருத்தப்பட்ட வருவாய்த் துறை அலுவலர்களின் பணி முதுநிலைப் பட்டியலை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி. விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாநிலத் துணைப் பொதுச் செயலர் ஆர். பாலகிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலர் அ. சோனை கருப்பையா, மாவட்டச் செயலர் க. முருகேசன், மாவட்டப் பொருளாளர் ராஜேஸ்கண்ணன் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.