புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே நெமிலிவயலிலிருந்து கிருஷ்ணாஜி பட்டினத்திற்கு பைக்கில் சென்ற துரைராஜ் (56) மீது, எதிரே வந்த சபீர்ஹான் (20) ஓட்டி வந்த பைக் மோதியதில் துரைராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மணமேல்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.