திருவரங்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ராமசாமி சேர்வை செல்லாயி அம்மா நினைவு முத்தரையர் கல்வி அறக்கட்டளை சார்பில் 31வது ஆண்டாக, 12ம் வகுப்பில் வெற்றி பெற்று மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்குச் சென்ற 60 மாணவர்களுக்கு தமிழக பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், திமுக பொறுப்பாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.