புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, வீட்டில் பசுமாடு வளர்த்து வந்த சக்திவேல் (48) என்பவர், நேற்று முன்தினம் மாட்டுக்கு தீவனம் வைக்கும்போது, எதிர்பாராதவிதமாக மாடு அவரை முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.