உலக மீனவர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் அடுத்த அக்கம்பேட்டை, கோட்டுச்சேரிமேடு ஆகிய மீனவ பகுதியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று (ஜனவரி 10) நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கோட்டுச்சேரி சட்டமன்ற அலுவலகத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.