காரைக்காலில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷை, நெடுங்காடு கோட்டுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆட்சியருடன் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார்.