காரைக்கால் மாவட்டம் தேவர் பேரவை சார்பாக இன்று(அக்.30) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 117 -வது ஜெயந்தி விழா மற்றும் மருது பாண்டியர்களின் 223 -வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. காரைக்கால் பாரதியார் சாலை பழைய பேருந்து நிலையம் அருகில் புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் அவர்கள் கலந்து கொண்டு தேவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.