புதுவையில் 'நல்லாட்சி வாரம் 2024' முன்னிட்டு புதுச்சேரி அடுத்த வில்லியனூர் சிறு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவ நலன் முகாம் மற்றும் விவசாயிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 22) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்த கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளின் கால்நடைகள் ஒரே இடத்தில் கொண்டுவரப்பட்டு அவற்றிற்கு தேவையான மருத்துவம், மலட்டுத்தன்மை நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்த நிகழ்வில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.