புதுவையில் குடும்ப அட்டை - ஆதார் இணைப்பு: சபாநாயகர் தொடக்கம்

புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அறிவிப்பின்படி, குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் சிறப்பு முகாம் மணவெளி தொகுதியில் சபாநாயகர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. அவர் தனது குடும்ப அட்டையையும் ஆதார் எண்ணுடன் இணைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த முகாம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி