உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், 14 வயது சிறுமியை நடுரோட்டில் வைத்து இளைஞர் ஒருவர் கொலை செய்ய முயன்றுள்ளார். ஜானு (20) என்ற இளைஞர், அந்த சிறுமியை ஆபாசமாக படம் பிடித்ததாக தெரிகிறது. மேலும், அந்த படத்தை அப்பகுதியினரிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சாலையில் சென்ற ஜானுவிடம் இதுகுறித்து சிறுமி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சிறுமியை கழுத்தை நெரித்து இளைஞர் கொலை செய்ய முயன்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நன்றி: X