திமுகவில் பொன்முடிக்கு மீண்டும் பதவி

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியது தொடர்பாக எதிர்ப்பு எழுந்த நிலையில், அப்போது பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி