கடலூர் மாவட்டம் ஆவினன்குடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், மதுபோதையில் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதில் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் இருவர் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது விபத்தை ஏற்படுத்திய எஸ்எஸ்ஐ ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி:NewsTamil24/7