சென்னை பெரம்பூரில் கவிஞர் பூவை செங்குட்டுவன் (90) உடல்நலக் குறைவால் காலமானார். பூவை செங்குட்டுவன், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, தாயிற் சிறந்த கோவிலுமில்லை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், இறைவன் படைத்த உலகை போன்ற காலத்தால் அழியாத பல்லாயிரம் பாடல்களை எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, மகாகவி பாரதியார் விருதை பெற்றுள்ள பூவை செங்குட்டுவன் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.