பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு செலுத்தி வருகிறது. இத்திட்டத்தில் விரைவில் 21வது தவணைத்தொகை பயனாளிகளுக்கு டெபாசிட் செய்யப்படவுள்ளது. இதுவரை கேஒய்சி அப்டேட் செய்யாதவர்கள் விரைந்து அதனை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in-க்கு சென்று, 'Farmers Corner' பிரிவில் உள்ள 'e-KYC' ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, ஆதார் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.