தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து இன்று (செப்.18) நடந்த விசாரணையில், தனியார் பள்ளிகள் இயக்குநரின் பரிந்துரை மீது, 12 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு கல்வித்துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, நிரந்தர அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.