அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்பு உள்ள இடங்களில் அமலாகத்துறையினர் சோதனையிட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் ஐ.பெரியசாமி மகனும், பழனி தொகுதி எம்.எல்.ஏ-வுமான செந்தில்குமார் அறையிலும் சோதனை நடத்த அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் 4 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் செந்தில்குமார் அறையின் கதவு திறக்கப்பட்டது. அங்கு அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர்.