வாக்காளர் பட்டியல் கணக்கெடுக்கும் படிவம் வழங்கும் பணி

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் 2026க்கான வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகிறது. 4.11.2025 முதல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விண்ணப்ப படிவங்கள் வீடு வீடாக வழங்கப்படுகின்றன. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் மற்றும் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எசனை ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுவதை 04.11.2025 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் அனிதா, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்/பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி