பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், காடூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபி, தனக்கு சொந்தமான வயலில் மக்காச்சோளம் பயிர் செய்வதற்காக புது வேட்டைக்குடி மற்றும் அகரம் சிகூர் ஊரில் உள்ள பாலாஜி உரக்கடையில் 5 மூட்டை கலப்பு உரம் வாங்கியுள்ளார். தண்ணீரில் கலந்தபோது உரம் கரையாமல், மணல் கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த வருவாய் அலுவலரிடம் விவசாயி கோபி புகார் அளித்துள்ளார். உடனடியாக வேளாண்மை துறை அதிகாரியை அழைத்து, சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.