தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நவம்பர் 2025 மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்த ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். வேலை அளிப்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-296352, 9499055913 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி