பெரம்பலூர்: திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அன்புமணி ராமதாஸ் உறுதி

குன்னத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி, தமிழக மக்கள் உரிமை மீட்பு நடை பயண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற உறுதியோடு வந்துள்ளதாகக் கூறிய அவர், மக்களுக்குக் கொடுக்கப்படும் இலவச திட்டங்களை நிறுத்திவிட்டு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். ஸ்டாலின் நிர்வாகத் திறமையற்றவர். திமுக அரசு தனக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், தனது சமுதாயத்தைச் சார்ந்த அமைச்சர்களை விட்டு அறிக்கை விடுவிப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி