தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் கேஸ் சிலிண்டருக்காக மக்கள் வெயிலில் காத்துக்கிடக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆன்லைனில் புக்கிங் செய்தாலும் நேரில் சென்றே சிலிண்டர் வாங்க வேண்டியதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த கொளுத்தும் வெயிலில் சுமார் 3 மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆன்லைனில் புக்கிங் செய்தவரிகளிடம் ரூ.50 கூடுதலாக கேட்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
நன்றி: Newstamil24x7