சென்னையில் கடந்த 40 நாட்களில் 50,000-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரேபிஸ் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நன்றி: பாலிமர்