'நம்ம ஊரு பள்ளி நிதி ரூ.1000 கோடியை தொட்டுள்ளது

'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட மொத்த நிதி ரூ.1,000 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த மகத்தான முன்னெடுப்பிற்கு உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்களுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்து கொண்டார். இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி