அக்., 01, 02 ஆயுதபூஜை, காந்திஜெயந்தி விடுமுறை முடிந்து பள்ளிகள் இயங்கி வருகிறது. வரும் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் தீபாவளி விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹாரத்தையொட்டி 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய 25, 26 தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை என்பது கூடுதல் சிறப்பு.