3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு இன்று (அக்.13) அறிவித்துள்ளது. அதன்படி ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய 6 துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி