நடிகை ஐஸ்வர்யா ராய், தனது தனிப்பட்ட தகவல்கள், பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை வணிக ரீதியாகவோ அல்லது வேறு எந்த நோக்கத்துக்காகவோ தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். தனது அனுமதியின்றி எந்தவொரு விவரத்தையும் பயன்படுத்த ஊடகங்கள் மற்றும் தனிநபர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.