பந்தலூர்: சாலை விபத்தில் துபாயில் பணிபுரிந்த என்ஜினீயர் பலி

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஸ்கூட்டர் மீது கேரள அரசு பஸ் மோதிய விபத்தில் துபாயில் பணியாற்றி வந்த சிவில் என்ஜினீயர் பிரின்ஸ் (33) நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். விடுமுறையில் சொந்த ஊர் வந்திருந்த பிரின்ஸ், வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. சேரம்பாடி பள்ளிவாசல் அருகே நடந்த இந்த விபத்தில், பிரின்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் பஸ் டிரைவர் பிரதீப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி