ஊட்டி: கட்டுப்பாட்டை இழந்த கார் பறந்து கவிழ்ந்து விபத்து

ஊட்டியில், கட்டுப்பாட்டை இழந்த கார் அந்தரத்தில் பறந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி நாளான நேற்று, ஊட்டி–மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார், பெட்ரோல் பங்க் இரும்பு தடுப்புகளை இடித்துக் கொண்டு அந்தரத்தில் பறந்து கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது விழுந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி