நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை ஒரு காட்டு யானை திடீரென சாலையைக் கடந்தது. இதனால், அப்பகுதியில் சென்ற வாகனங்கள் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். யானைகள் அடிக்கடி சாலையைக் கடக்கும் இந்த பகுதியில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.