ஊட்டி: வீடு வீடாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி!

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நேற்று தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா இந்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை இந்த கணக்கெடுப்பு நடைபெறும். ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டமன்ற தொகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி