சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார் - தவெக உறுதி

மதுரை தவெக மாநாட்டு திடலில் இன்று (ஆகஸ்ட் 20) 100 அடி உயர கொடிக்கம்பம், எதிர்பாராதவிதமாக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலுமாக நொறுங்கியதால் அதன் உரிமையாளர் தினேஷ் கண்கலங்கியபடி பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், தினேஷை தொடர்பு கொண்டு தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். மேலும், அவருக்கு புதிய கார் வழங்கப்படும் என தவெக தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி