நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொல்லிமலையில் ஆகாய கங்கை, நம் அருவி, மாசிலா அருவி போன்ற இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள் உள்ளன. நேற்று விடுமுறை நாள் என்பதால், ஏராளமான பொதுமக்கள் கொல்லிமலைக்கு வருகை தந்து, அங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இயற்கை சூழல் நிறைந்த இப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.